Featured Posts

  • Prev
  • Next

பாதாம் ஃபிர்னி

Posted on : 02-09-2010 | By : mohamedali | In : உடல் நலம் -(Health)

0

இனிப்பு வகைகளில் இந்த பிர்னி சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு – காஷ்மீராகும். பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் மணமும் சுவையும் கொண்ட பிர்னி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடியது. பண்டிகை நாட்களிலும், விருந்தினர் வருகையின்போதும் பரிமாறிப் பாராட்டைப் பெறலாம்.

சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு எப்படிச் செய்வது என்று சொல்லித் தருபவர் நம் தொடர் வாசக சகோதரி நூர்ஜஹான் ரஹீம்.

தேவையானப் பொருட்கள்:

பாஸ்மதி அரிசி 150 கிராம்
சர்க்கரை 200 கிராம்(அல்லது தேவைக்கேற்ப)
கிரீம் மில்க் (அ) சுண்டக்காய்ச்சிய பால் 400 மில்லி
மில்க் மெயிட் 100மி
பாதாம் பருப்பு 25 (எண்ணிக்கை
முந்திரிப்பருப்பு 15
பிஸ்தாப்பருப்பு 100கி
தண்ணீர் 500மி.

“விஞ்ஞான விபரீதங்கள்”-ரஹ்மத் ராஜகுமாரன்

Posted on : 01-09-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

ரஹ்மத் ராஜகுமாரன்

“உனக்கு ஏதாவது தீங்கு வந்தால் அது உன்னால் தான் வந்தது.” குர்ஆன் (4:79)

விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராது. ஆனால் பொறுப்பில்லாத விஞ்ஞான வளர்ச்சி நிச்சயம் பேரழிவைத் தரும். மனிதன் இன்று தன் சமுதாயத்தையே அழித்துவிடும் அளவுக்கு அணு ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். அணுசக்தி விஞ்ஞானம் என்பது குடிசைத் தொழில் போல ஆகிவிட்டது. அணு ஆயுதங்களின் உள்ளே உள்ள ரேடியோ ஆக்டிவ் கதிர் வீச்சு சமாச்சாரங்களை உடனடியாகக் கொல்வது கஷ்டம்.

அவற்றை வெடிக்க விடாமல் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றின் கதிர் வீச்சை அணைக்க ஆணிரக்கணக்கான வருஷங்கள் ஆகும். அணுசக்தி உற்பத்தி செய்த பின் அந்த யுரேனியத்தின் சாம்பலை என்ன செய்தாலும் எங்கு புதைத்தாலும் அங்கு கதிர்வீச்சு நிச்சயம் கசியும் ஆபத்து உண்டு. நிறைய தேள்களை மடியில் கட்டிக் கொண்டு பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டும் நவீன உலகத்தில் பிரவேசிக்கிறோம்.

அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ததைப் போன்று பொறுப்பற்ற செயல் மனித சரித்திரத்தில் இல்லை.
“தீமை செய்தவர்களையே தீமை சூழ்ந்து கொள்ளும் குர்ஆன்” (35:43)

அல்லாஹ்வின் வேதத்தை – இந்த வரியை யார் அவர்களுக்கு ஓதிக்காட்டுவது? அடுத்த வசனத்தை கொஞ்சம் பாருங்கள் விஞ்ஞானத்தின் அகங்காரங்கள் தெரியவரும்.
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களின் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது.” (குர்ஆன் 30:41).

கடலிலும், சமுத்திரங்களிலும் உள்ள உயிரினங்கள் இன்னும் 30 வருஷங்களில் செத்துப்போகும் என்று கடல்வாழ்வின் உயிரியலாளர்கள் சொல்கிறார்கள். சென்ற 60 வருஷங்களில் நாம் கடலில் கொட்டிய குப்பைகள் அளவில்லாதவை பிரிட்டன் மட்டுமே ஐரிஷ் கடலில் வருஷத்துக்கு ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் டன் தொழிற்சாலைக் குப்பையையும், வீட்டுக் குப்பையையும் கொட்டுகிறது. இங்கிலீஷ் கால்வாயில் மட்டும் 80 ஆயிரம் டன் கொட்டுகிறது. மொத்தம் தன்னைச் சுற்றியுள்ள கடல்களில் பிரிட்டன் 2.5 கோடி டன் குப்பையை கொட்டியிருக்கிறது.
கடலில் கொட்டும் குப்பை மீன்களை உடனே கொல்லுவதில்லை. அதில் பொதிந்திருக்கும் ரசாயன விஷங்கள் மெல்ல மெல்லத்தான் கடலின் உயிரினங்களின் உயிரை குடிக்கும். இதனால் சில் மீன்களின் வம்சங்களே நசிந்து போய் எதிர்காலத்தில் மீன் சாப்பிடும் பழக்கத்தைவிட வேண்டியது வரும். இதனால் நம் (Food Cycle) உணவுச் சக்கரம் பாதிப்புக்குள்ளாகும்.அமெரிக்க தேசத்து அலங்கார பொருட்களில் ஒன்றான ‘ஏரோஸல்’ என்ற மருந்தும் செண்டுமாக ‘புஸ்’ அடித்துக் கொள்கிறார்களே அதிலுள்ள ஹலோ கார்பன்கள் அதிக நாள் நம்மைச்சுற்றி விலகாமல் இருந்துவிட்டு பின் நமக்கு ஹலோ சொல்லிவிட்டு பூமியின் மேற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் ‘ஓஸோன்’ வாயுவைத் தின்றுவிடுகிறது. நம் பிரிட்ஜில் பயன்படுத்தும் ‘பிரியான்’ என்கிற வாயும் ஒஸோனை ஓட்டையாக்கிவிடுகிறது.

அந்த ஓஸோன் வாயுபடலம் நம் பூமிக்கு வரும் சூரிய வெளிச்சத்திற்கு பில்டர் போய்விடுகிறது விளைவு? அல்ட்ரா வயலட் வெளிச்சம் நம் மேல் அதிகம் பட ஒரு வகையான தோல் கான்சர் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்ல சூரிய வெளிச்சத்தில் அல்ட்ராவயலட் அதிகரித் தால் பற்பல சின்னச் சின்ன நன்மை செய்யும் பாக்டீரியாக்களெல்லாம் செத்துப் போய் நம்முடைய உணவுச்சக்கரம் இங்கேயும் பாதிக்கப்பட்டு என்ன விளைவு ஏற்படும் என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட உதாரணங்களைத் தவிர இன்னும் எத்தனையோ விஞ்ஞானத்தின் விபரீதங்கள் கடலையும், தரையையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இப்போது (30:41) வசனத்தை திரும்ப படியுங்கள்.
ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் நோபல் தற்செயலாக ‘டைனமைட்’ கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிஸரினைத் திரவ ரூபத்தில் இடம் மாற்றும் போது அது வெடித்துவிடும் அசௌகரியம் இருப்பதால். ஒரு நாள் நைட்ரோ கிளிஸரினைப் பக்கத்தில் வைத்திருந்த எரிமலை மண்ணை ‘கிளல்கர்’ என்னும் மண்ணுடன் கலக்க அது சட்டென கட்டி, தட்டிப்போக அதை எடுத்துப் போவது சுலபமாயிற்று. அப்போது ஆரம்பித்த ரத்தகளறி இன்று வரையிலும் அனத்தம். ஜப்பான் நாஹஸாகி, ஹிரோ~pமாவின் வடுவும் மறையவில்லை புண்ணும் ஆற வில்லை.

மக்களின் நன்னைக்காக கண்டுபிடிக்கப்பட்ட அணுசக்தி மக்களை சாவுக்கு அழைத்துப் போனது.
“மனிதர்கள் தீமையைக் கொண்டும் சோதிக்கப்படுவார்கள்.” குர்ஆன் (7:168)”நன்மையுடன் தீமையைக் கலக்கிறார்கள்” (9:102).

தி.மு.க. ஆட்சிக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted on : 31-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

சென்னை: தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினரக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசுகையில்:

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக எப்போதும் விளங்குபவர் கருணாநிதி. 31 ஆண்டுகளாக நானும் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய  கோரிக்கை என்னவென்றால்,  அழைப்பிதழில் என்னுடைய பெயரை ஒவ்வொரு முறையும் சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகிறீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்றுவருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களின் ஒருவனாக என்னைக் கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

கழக ஆட்சியில் தான் மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கருணாநிதி தான், அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டியதும் அவர் தான்.

900 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவமனை – காஞ்சீபுரம் அருகே கண்டுபிடிப்பு!

Posted on : 30-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

900 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கைகளுடன் மருத்துவமனை இருந்தது பற்றிய கல்வெட்டு காஞ்சீபுரம் அருகே கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆலய சுவரில் இருந்து பழைய கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் 900 ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலுடன் இணைந்து ஒரு மருத்துவமனை செயல்பட்டது பற்றி அரிய தகவல் கிடைத்து உள்ளது.

இதுபற்றி தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியதாவது:-

பாலாறு, வேகவதி ஆறு மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் கரையோரம் திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் இந்த ஆலயத்தில் வீர சோழன் என்று பெயரிடப்பட்ட 15 படுக்கை கொண்ட மருத்துவமனை இருந்தது தெரியவந்துள்ளது. இதில் நிறைய ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். கோதண்டராமன், அஸ்வத்தமன், பகத்தன் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்களும், பல செவிலியர்களும் ஊழியர்களும் இங்கு பணியில் ஈடுபட்டு வந்து இருப்பது தெரியவருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் எலும்புருக்கி நோய், சிறுநீரக கோளாறு, மூலவியாதி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து உள்ளது.

கை குலுக்குவோம்

Posted on : 27-08-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

கை குலுக்குவோம்

காற்றோடு மேகம்
கை குலுக்கும் போது தான்
மழையாகிறது
மண்ணோடு மழை
கை குலுக்கும் போது தான்
வளமாகிறது
வண்டோடு மலர்
கை குலுக்கும் போது தான்
கனியாகிறது
உளியோடு கல்
கை குலுக்கும் போது தான்
சிலையாகிறது
விரலோடு வீணை
கை குலுக்கும் போது தான்
இசையாகிறது
நாடோடு நாடு
கை குலுக்கும் போது தான்
நட்பாகிறது
கண்ணோடு கண்
கை குலுக்கும் போது தான்
உருவங்கள்
பரிமாறப் படுகிறது
உடலோடு உடல்
கை குலுக்கும் போது தான்
சந்ததியாகிறது
மலரோடு மலர்
கை குலுக்கும் போது தான்
மாலையாகிறது
சூட்டோடு சுடர்
கை குலுக்கும் போது தான்
சுவாலை ஆகிறது
மனிதனோடு மனிதன்
கை குலுக்கும் போது தான்
உறவு வலுவாகிறது

இயற்கை எல்லாம்
கை குலுக்கி மனிதனுக்கு
கற்று தருகிறது
கண்டவுடன் கைகுலுக்குவோம்
உறவை வலுபடுத்துவோம்
இதையெல்லாம்
பேப்பரோடு பேனா
பேசும் போது தான்

by ராஜா கமால்

Source : http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_20.html

வடமாநிலச் சுற்றுலா – 8

Posted on : 25-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

by கிளியனூர் இஸ்மத்

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள் அது எங்களுக்கும் உண்டானது. களைப்பை தீர்க்க எங்களின் கைடு ஜெய்மஹாலை காட்டினார். பெரிய ஏரியின் நடுவில் ஜெய்மஹால் அமைந்திருந்தது. இது மன்னர் பீம்சிங்கின் உல்லாச மஹால் இதனுல் அரச பெண்கள் அதாவது பீம்சிங்கின் குடும்பப் பெண்கள் உள்ளே அனுமதி இல்லை இந்த மஹால் முழுக்க முழுக்க மன்னருக்கு மற்றும் ஆண்களுக்கு உல்லாசத்தை கொடுப்பதற்காக வடிவமைத்திருக்கிறார்.

ஜெய்பூர் இளம் சிவப்பு நகர மையத்தில் ஜெய்மஹால் அமைந்திருக்கிறது. மாலை நேரங்களில் ஜெய்பூர் வாசிகள் இங்கு குழுமி உரையாடுகிறார்கள் நடைபயில்கிறார்கள். இவர்களின் வாய்களுக்கு ருசிபார்க்க பலதரப்பட்ட பலகாரங்கள் தள்ளுவண்டியில் தள்ளி விற்கிறார்கள்.

டெம்போவில் அமர்ந்தபடியே கைடு வாயாலயே படம் காட்டினார். இளம் சிவப்பு நகரத்திற்குள் டெம்போ நுழைந்தது. அந்த நகரம் முழுக்க வணிகக் கடைகள். உணவு விடுதி வாசல்களில் வரிசையாக அமர்ந்திருந்த ஏழை பசிக்காரர்கள்;. தினமும் யாராவது ஏதாவது ஒரு நேர்த்திகடனை நிறைவேற்றினால் தான் இவர்களின் பசி தீரும் இல்லையெனில் ஐயோ பாவம் என யாராவது பணம் வைத்திருப்பவர் இரக்கப்பட்டால் அவர்களின் வயிற்றில் உணவு இறங்கும் அவர்களுக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்.


கால்நடைகளுக்கு இளம்சிவப்பு நகரத்தில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மனிதர்களோடு அவைகளும் நடக்கின்றன கழிக்கின்றன. சுத்தத்தை பற்றி மனிதர்களே கவலைப்படாத போது கால்நடைகளுக்கு எதற்கு கவலை.

இளம் சிவப்பு நகரத்திற்குள் மியுசியம் இருக்கிறது அதில் மன்னர் அணிந்த உடைகள் உபயோகித்த பொருட்கள் என பலபொருட்களை சிறை வைத்திருந்தார்கள்.

முகஸ்துதியின் விபரீதம்!

Posted on : 24-08-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)

0

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5)

அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:

  1. நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காகவே என்ற இஃக்லாஸ்
  2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செய்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும்’ அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி

நாம் செய்கின்ற எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதில் அல்லாஹ்வுக்காகவே என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால் அல்லது அந்த எண்ணத்தில் களங்கம் ஏற்படுமாயின் அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது மட்டுமல்லாமல் அதன் மூலம் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.

ஆயங்குடி

Posted on : 24-08-2010 | By : mohamedali | In : ஊர்

0

ஆயங்குடி ஜாமியா பள்ளிவாசல்ஆயங்குடி (Ayangudi), இந்தியாவில் சமூக நீதி காத்த பூமியான தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.

ஆயங்குடி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்றதொகுதிக்கும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. சட்டமன்ற உறுப்பினராக திரு.ரவி குமார் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினராக வி.சி கட்சியின் தலைவரான திரு. திருமாவளவனும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 898 ஆண்கள், 929 பெண்கள் ஆவார்கள். ஆயங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும்.

ஆயங்குடி எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிருந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்ளிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும . சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது.

தாம்பத்யம் சிறக்க சிறந்த வழி : ஆய்வு முடிவு

Posted on : 23-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

புகைபிடிக்கும் பழக்கம் உடைய கணவன்மார்கள் புகைபிடிப்பதை நிறுத்தி கொண்ட பின் தாம்பத்தியத்தில் அதிக இன்பம் கொள்வதாக ஹாங்காங் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 28.1 சதவீத புகைபிடிக்கும் ஆண்கள் விறைப்பு தன்மையில் குறைவினை உடையர்கள், புகை பிடிப்பதை நிறுத்திக்கொண்ட பின் அதில் 91.5  சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் உதவிய பேராசிரியை சோஃபியா சான் “சீனா மற்றும் ஆசியாவில் ஆண்களுக்கு விறைப்புதன்மையில் மந்தம் பரவலாக காணப்படுகிறது” என்றும் “இந்த ஆராய்ச்சி புகைபிடிப்பதை நிறுத்த உதவும்” என்றும் கூறியுள்ளார்.

இவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட லாம் தை-ஹிங் கூறுகையில் “புகைபிடிப்பவர்கள் அதன் மூலம் ஏற்படும் பின் விளைவுகளை தெரிந்து கொண்டு, விறைப்பில் குறைவு ஏற்படுதல் மற்றும் இன்னபிற பாதிப்புகளில் இருந்து உடனே மாற்றம் காண புகைபிடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றுள்ளார்.

30 முதல் 50  வயதுடைய 700பேரை மூன்று வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இவ்வாறு நிருபிக்கப்பட்டுள்ளது.

http://www.inneram.com/2010082310229/quitting-smoke-is-boosting-sex-life

திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை –

Posted on : 23-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

1

திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை – கவிஞர்
இரா.ரவி  editor www.kavimalar.com உலகப் பொதுமறையான திருக்குறளில் 1330
குறள்கள் இருந்தாலும், குடிமை பற்றிய 10 திருக்குறளைக் கடைபிடித்தால் வாழ்வில்
உயரலாம். மனிதர்களில் சிலர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன் என இருமாப்புடன்
இருக்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் யார் ? உயர்ந்த குடி என்பதற்கு பல்வேறு
விளக்கங்கள் தந்துள்ளார். திருவள்ளுவர் வழியில் வாழ்பவரே உயர்குடி.

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 951

எந்த ஒரு மனிதன், நடுநிலை தவறாமல் நாணயத்தோடு நடக்கிறானோ ? அவன் தான் உயர்ந்த
குடி உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு நாணயம் தவறி,
நடுநிலைமையின்றி வாழ்பவன் உயர்ந்த குடியே அன்று. இது தான் திருவள்ளுவர் சொல்ல
வந்த கருத்து. பிறப்பால் தாழ்ந்த குடியில் பிறந்தாலும், நேர்மையாக வாழ்பவன்
உயர்ந்த குடி தான். இது தான் திருவள்ளுவர் தரும் விளக்கம்.

ஒழுக்கமும் வாய்மையும் நானும் இம்மூன்றும்
இருக்குhர் குடிபிறந் தார். – குறள் 952

உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று உதடு சொல்வதை விட சிறந்தது. உன்னுடைய நல
;ஒழுக்கமான செயலால் உலகம் உன்னை உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று
போற்றும்படியாக வாழ வேண்டும். காஞ்சிபுரத்தில் காமுகன் அர்ச்சகர் தேவநாதன்
உயர்ந்த குடி என்று சொல்லப்படும் அந்தனர் சமுதாயத்தில் பிறந்தவன் தான். ஆனால்
அவனை உலகம் உயர்குடியாக ஏற்பதில்லை. காரணம் உயர்ந்த குடியில் பிறந்தாலும்
ஒழுக்கம் தவறியவன். இழிசெயல் செய்தவன், மனிதனாகக் கூட மதிக்கப்படுவதில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றைக்கும்
பொருந்துவதாக உள்ளது.

பெயரில்லாமல் ஒரு FOLDER – Try this Very Ni

Posted on : 21-08-2010 | By : mohamedali | In : Uncategorized

0

From:    Faizur Hadi

பெயரில்லாமல் ஒரு கோப்புறையை (Folder) உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு கோப்பும்(File),கோப்புறையும்(Folder) ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில்(Windows) கோப்புறை (Folder) ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

பெயரை வழங்காதுவிடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் முன்னிருப்பாக(default) போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப Space Bar விசையையோ(Key) Delete விசையையோ(key) அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.

நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.

முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு விசைப்பலகையில்(Keyboard) ‘Alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255′ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு கோப்புறை தோன்றக் காணலாம். இலக்கத்தை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் எண்ணியல் விசைப்பலகையையே(Numeric Keyboard) பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க. (Make sure “Num-Lock” is OFF)

கொசு விரட்டி வெடித்தது! தீயில் கருகி தந்தை மகள் சாவு!

Posted on : 21-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

கோவை : மின்சாரக் கசிவால் கொசு விரட்டி பாட்டில் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் உறங்கிகொண்டிருந்த கல்லூரி மாணவி தீயில் கருகினார். இவரை காப்பாற்ற சென்ற அவரது தந்தையும் தீக்கிரையானார்.

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் தாமஸ்(50); பாப்பம்பட்டி பிரிவில் உள்ள இரும்புக் கடை ஊழியர். இவரது மகள் அல்போன்சா(19). உக்கடம் அருகே ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி. நேற்று முன்தினம் இரவு அல்போன்சா தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் அந்த அறையில் இருந்து புகை வருவதை பார்த்த தாமஸ், அவரது மனைவி ஜான்சியும்  உடனே அந்த அறைக்கு சென்ற போது படுக்கையுடன் சேர்ந்து மகளும் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அறையிலிருந்து வந்த புகையின் நெடியால் மயங்கி கணவனும், மனைவியும் விழுந்தனர்.

நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிவதை பார்த்து பக்கத்து வீட்டார், விரைந்து சென்று மயங்கி கிடந்த தாமசையும், ஜான்சியையும் எடுத்து வந்து முதலுதவி செய்தனர். இதன் பின், அப்பகுதி மக்கள், வீட்டில் நுழைந்து பார்த்தபோது மாணவி அல்போன்சா தீயில் கருகி இறந்து கிடந்தார். இத்தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ அணைத்தனர். அப்போது, மயக்கம் தெளிந்து எழுந்த தாமஸ் அலறியபடி மீண்டும் வீட்டினுள் சென்றார். அப்போது தீயில் அகப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், மாணவி அல்போன்சா தூங்கிய அறையில் கொசு விரட்டி பாட்டில் வெடித்து சிதறியதால்  அதன் நெடியில் மயக்கமடைந்து  தீயில் கருகி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்

http://www.inneram.com/2010082010173/mosquito-repeller-blasts-daughter-and-father-burned

மன்ஹாட்டன் மசூதி கருத்துக்கள்: வருத்தமில்லை – ஒபாமா!

Posted on : 19-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

நியூயார்க் நகரில் சென்ற 2001 செப்டம்பர் 11 அன்று தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்துக்கு அருகில் நிறுவப்பட்டுவரும் பல்லடுக்குக் கட்டடத்தின் தரைத்தளத்தில் மசூதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த மசூதி அமைப்பதற்கு வலதுசாரி அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதும், அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆதரவை நல்குவதாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஒபாமாவின் இக்கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு “அமெரிக்காவை அந்தரத்தில் ஒபாமா விட்டு விட்டார்” என்று கிண்டல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தனது கருத்தை சற்றே மாற்றிய ஒபாமா மதச் சுதந்திரத்துக்குத் தான் தனது ஆதரவு என்றும் இரட்டைக் கோபுரம் இருந்த இடத்திற்கு மிக அருகே மசூதிகளை நிறுவுவது பதற்றத்தை உண்டுபண்ணக்கூடும் என்றும் கருத்தை மாற்றிக் கூறினார்.

இந்நிலையில் NBC  தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் முன்னர் தான் தெரிவித்த கருத்துக்காக வருந்தவில்லை என்றும், அக்கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

http://www.inneram.com/2010081910150/no-regrets-on-manhattan-mosque-issue-obama-says

100 ரூபாயில் ஏழே நாட்களில் ரேஷன் கார்டு: தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

Posted on : 18-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

சென்னை: வெறும் இருப்பிட ஆதாரத்திற்காக மட்டும் ரேஷன் கார்டு வேண்டுவோர், ரேஷனில் எந்த பொருளும் தேவைப்படாதவர்கள்,  ‘தத்கல்’ முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் போட்டோவுடன் பூர்த்தி செய்து, கருவூல கணக்கில் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இருப்பிட முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்து, ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

ஏழு நாளில் வெள்ளை நிறத்திலான ரேஷன் கார்டு வழங்கப்படும். இவற்றை பொருட்கள் பெறும் கார்டாக மாற்றம் செய்ய முடியாது என, அரசு தெரிவித்துள்ளது

http://www.inneram.com/2010081810119/100

வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்

Posted on : 17-08-2010 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள். முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து நிதானமாக மதிய தொழுகையை நிறைவேற்றினாள். அதன் பின் தன் இருகரம் விரித்து அவள் இறைஞ்சிய சில வரிகள் இந்தக்கதைக்கு தேவையானவை:

என் இறைவனே..! என் படிப்பைத் தொடரும் வழியை ஏற்படுத்தி அருள்வாயாக. கல்வியில் என் நாட்டத்தை அதிகப்படுத்துவாயாக! கல்வியை கண்ணுக்கு ஒப்பிட்டவனே, எனக்கும் அக்கண்ணில் ஒளியை நிரப்புவாயாக”

யாஸ்மின் மேற்கண்டவண்ணம் பிரார்த்திக்க காரணம் இல்லாமலில்லை:

இரண்டாண்டுகளுக்கு முன் அவள் ‘பெரிய மனுஷி’ ஆனதிலிருந்து அவளுடைய படிப்பு தடைப்பட்டது. சவூதியில் வேலை செய்யும் அத்தாவிடமிருந்து வந்த கடிதத்தில் அந்தத் தடங்கல் எழுத்து வடிவத்தில் இருந்தன… “யாஸ்மின் படித்தவரைக்கும் போதும், நிறுத்தி விடவும்”. குடும்பத்தின் செயல் தலைவியான அம்மாவுக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தன. “நாளையிருந்து நீ பள்ளிக்கூடம் போ வேணாம்” என்று ஒரே வார்த்தையில் யாஸ்மினின் படிப்புக்கு தாழ் போட்டாள்.

பலஸ்தீனம் – மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் – வெ. ஜீவகிரிதரன்

Posted on : 17-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள் கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர்.

இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் “காஸாவை விடுவிப்போம்” என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.
இவர்கள் இத்தாலி, அயர்லாந்து, கனடா, கிரேக்கம், துனிசியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, டென்மார்க், சைப்ரஸ், லெபனான் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். பல்வேறு சமூக தளங்களிலிருந்து வந்தவர்கள். பல்வேறு பணிகளில் உள்ளவர்கள். 2008 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக 17 நாடுகளைச் சேர்ந்த 44 ஆர்வலர்கள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் படகில் ஏறி காஸாவுக்குள் நுழைந்தனர்.
இதுபோல ஏறத்தாழ 10 முறைக்கும் மேலாக இவர்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தனர். பலமுறை இஸ்ராயீல் ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாயினர். கடைசியாக கடந்த மே-மாதம் இவர்களின் படகுகள் மீது இஸ்ராயீல் ராணுவம் தொடுத்த மிருகத்தனமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களெல்லாம் பலஸ்தீன பஃதா இயக்கத்தினரோ அல்லது காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினரோ அல்லது ஆயுதம் தரித்த வீரர்களோ அல்ல. மாணவர்கள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தரித்திருந்தது “மனித நேயம்” என்ற ஆயுதம் மட்டுமே. இவர்களின் மீதான கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவிலே இஸ்ராயீலின் கோர முகம் வெளிப்பட்டு பல்வேறு நாடுகளும் தம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இத்துணை கண்டனங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் மீறி இன்றளவும் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்தே வைத்துள்ளது. குறிப்பாக காஸாவின் கடல் பகுதி முழுக்க இஸ்ராயீல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கென்ன காரணம்? ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலா? அல்லது ஹாமாஸ் அமைப்பு காஸாவிலே மிகுந்த செல்வாக்கோடு இருப்பதாலா? ஹாமாஸ் 2006ம் வருடம்தான் காஸா தேர்தலில் பெரும்பான்மை பெற்றது.
ஆனால், காஸா முற்றுகைக்கான காரணம் 1999லேயே தொடங்கிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

காஸா மீனவர்கள்

நாம் காஸாவைப் பற்றிய தகவலில் சற்று பின்னோக்கி செல்வோம். காசா கடல் பகுதியில் காஸா மீனவர்கள் சுமார் 3000 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சிறிய, நடுத்தர, பெரிய படகுகள் என சுமார் 700 படகுகள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஐ.நா.வின் கடல் சார் பொருளாதார சட்டம் பிரிவு எண் 5 இன் படி ஒரு நாட்டின் கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதி கடல்சார் சிறப்பு பொருளாதார பகுதியாக கருதப்பட்டு அந்த நாடு அந்த பகுதியிலுள்ள கடல் செல்வங்களை அனுபவிக்கலாம் எனக் கூறுகிறது.
1993 ஆம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி பலஸ்தீனம் காசாவின் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. 1978 க்கு முன்பு சினாய் கடற்கரை பகுதி வரையிலான சுமார் 75,000 சதுர கி.மீ. பரப்பளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலஸ்தீன மீனவர்கள் இதன் மூலம் வெறும் 600 சதுர கி.மீட்டருக்குள் முடக்கப்பட்டனர். 1994ம் வருடம் பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாஸர் அரபாத்தும் அன்றைய இஸ்ராயீல் பிரதமர் இட்ஜக் ரபினும் கசாரூஜெரிக்கோ ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி காசா கடல் பகுதியில் 20 கடல் மைல்கள் தொலைவு வரை மீன் பிடித்துக் கொள்ளலாம் எனவும் எகிப்து – இஸ்ராயீல் கடல் எல்லைப் பகுதிகளில் பலஸ்தீன மீனவர்கள் மீன் பிடிக்க நுழையக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

காஸாவின் எண்ணெய் வளம்

இந்நிலையில் 1999ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஜி. குரூப் என்ற பெட்ரோலிய கம்பெனி ஒன்று காஸா கடல் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்தது. கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 10 முதல் 15 கடல் மைல் தொலைவு வரை இந்த எண்ணெய்ப் படுகைகள் பரந்து விரிந்து கிடப்பதையும் இதிலிருந்து சுமார் 1.3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதையும் கண்டறிந்தது. இதன் மதிப்பு சுமார் 400 கோடி டாலர்களாகும். இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் இதைவிட பல மடங்கு எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும், காஸா பகுதி இன்னொரு துபையாக மாற வாய்ப்புள்ளதையும் வெளிப்படுத்தியது.
இந்த எண்ணெய் வளம் பலஸ்தீனத்தின் 10 வருட மின்சார தேவையை நிறைவேற்றுவதோடு, ஏற்றுமதி செய்யும் வகையில் ஏராளமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டதும், யாசர் அரபாத் அந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கடலுக்கடியில் குழாய்களை பதித்து எரிவாயு காஸாவுக்குள் கொண்டுவரப்பட்டு மின்சார உற்பத்தியை துவக்குவது எனவும், உபரி எரிவாயுவை ஏற்றுமதி செய்வது எனவும் திட்டமிடப்பட்டது.

பிரதமர் செயலை இப்போதே செய்கிறேன்: ராகுல்

Posted on : 14-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

மைசூர்: வரும்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதை நான் இப்போதே செய்து கொண்டு இருக்கிறேன் என, ராகுல்காந்தி கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எம்.பி. மைசூர் பெங்களூர் ரோட்டில் உள்ள செயின்ட் பிலோமினா கல்லூரியில் இந்திய தேசிய மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி:

போராட்ட சுதந்திரம், பேச்சு சுதந்திரம், உரிமை சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றி இளைஞர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். நமது நாட்டில் உயர்கல்வி கற்றுக்கொண்டு, வெளிநாட்டில் சென்று சேவை செய்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. நமது நாட்டிலேயே பணியாற்ற வேண்டும். மேலும் வெளிநாட்டில் உயர்கல்வி கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி நமது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

நமது நாட்டின் முதுகெலும்பாக கல்வி, விவசாயம் ஆகியவை உள்ளது. எனவே கல்வி, விவசாய முன்னேற்றத்துக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு, அதன் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு வெளிநாட்டு விவசாய முறைகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். மேலும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, அதன் மூலமும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை களைய இளைஞர்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதன்மூலம் நமது நாடு வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றார். பின்னர் அவரிடம்,  நீங்கள் பிரதமர் ஆவீர்களா? அவ்வாறு பிரதமர் ஆனால் மக்களுக்கு என்ன செய்வீர்கள்?’ என்று மாணவர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில்,  நான் வரும்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதை நான் இப்போதே செய்து கொண்டு இருக்கிறேன்’ என்று சிரித்தபடி சொன்னார்.

வலிமையும் வளவாழ்வும்

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

வலிமையும் வளவாழ்வும்

மனித வாழ்க்கையில், மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம் என்பதை இன, மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
இப்பருவத்தில் நாம் பெறும் ஒழுக்கம் அல்லது ஒழுக்கமற்ற பயிற்சிதான் நம் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும். இதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
“A sound mind in a sound body is a short but full description of a happy state in the world.”
– John Locke (1632-1704)

“Bodily exercise, when compulsory, does no harm to the body. But knowledge which is acquired under compulsion obtains no hold on the mind.”
- Plato (427 BC-347 BC) in ‘The Republic’
மேற்காணும் முதல் பழமொழியில் ஜான் லோக்கி கூறுவதுபோல், உறுதியான உடலில் இருக்கும் உறுதியான மன நிலையே இவ்வுலக வாழ்வின் இனிமை நிலைக்குக் கட்டியம் கூறுவதாகும். இதையும் விஞ்சி, இரண்டாவது முதுமொழியில், ‘The Republic’ எனும் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பின் ஆசான் ப்லேட்டோ குறிப்பாகக் கூறுவது, இளமையில் செய்யவேண்டிய உடற்பயிற்சியின் இன்றியமையாமை பற்றியதாகும். இவர் அழகாகச் சொல்கிறார்: “கட்டாயமாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சியானது, உடலுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடாது. ஆனால், கட்டாயத்தால் பெற்ற கல்வியறிவானது, மனத்துள் நிலைத்திருக்காது.”
இன்று பெரும்பாலான கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவியர்க்குப் பாட நூல்களென்றும், வழிகாட்டி நூல்களென்றும், வீட்டுப் பாடங்களென்றும், ‘ட்யூஷன்’ பாடமென்றும், இன்னும் இவை போன்ற சுமைகள் பலவற்றைச் சுமத்தி, அவர்களைக் கல்வியாளர்களும் கல்விக் கூடங்களை நிர்வகிப்பவர்களும் வெறும் ‘சுமை தூக்கிகளாக’ ஆக்கிவிடுகின்றார்கள் என்று கூறினால் மிகைக் கூற்றாகாது. இந்நிலையில் சிறிதேனும் மாற்றத்தைச் செய்து, அவர்களுக்குத் தரமான உடற்பயிற்சிகளை வழங்கினால், அறிஞர் ப்லேட்டோ கூறுவது போன்று, உடலுக்குத் தீங்கு விளைக்காத சில உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஜான் லோக்கி கூறுவது போன்று, ‘A sound mind in a sound body’ உடன் எதிர்காலத்தின் இளைய சமுதாயத்தினரைப் பரிணமிக்கச் செய்யலாம்.
இவ்வகையில், நமதூரில் இயங்கும் கல்விக்கூடங்கள் எதிலும் இல்லாத ‘குங்ஃபூ’ என்ற ஒரு சிறப்பு உடற்பயிற்சியை இளஞ்சிறார்களுக்குக் கொடுக்க நமதூரின் ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கியுள்ளது. இப்பயிற்சியைச் சோதனை அடிப்படையில், முதலில் 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், தஞ்சையைச் சேர்ந்த சகோதரர் முபாரக் மாஸ்ட்டர்.
52 வயதாகும் இவருக்கு, இக்கலையில் 35 ஆண்டுகளின் பட்டறிவு உண்டு. இவர், ‘The Best Martial Arts Trainer in Tanjore District’ என்ற பாராட்டிற்குச் சொந்தக்காரர். இதுவரை நான்கு Black beltகளைப் பெற்றுள்ளார். இவரின் ஆண் மக்கள் மூன்று பேரும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு ‘பிலேக் பெல்ட்டு’களைப் பெற்றவர்களாவர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் முபாரக் மாஸ்ட்டருக்கு 1500 மாணவர்கள் உள்ளனர். சிறார்களுக்கு இந்த ‘Martial Arts’ கற்றுக் கொடுத்து, ஆண்டு முடிவில் இவரே அவர்களுக்குச் சான்றிதழும் பட்டை (பெல்ட்டு)களும் வழங்குவார்.
ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி இப்பயிற்சியை அறிமுகப்படுத்தியதன் முழுமுதல் நோக்கம், மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் உள்ள தேவையற்ற அச்சவுணர்வைப் போக்கி, அவர்களைத் துணிவுள்ளவர்களாக, அறிவாற்றல் பெற்றவர்களாக, தம் பொறுப்புகளை உணர்பவர்களாக ஆக்குவதேயாகும். வருங்காலத்தில் கிடைக்கும் பெற்றோர்களின் வரவேற்பைப் பொறுத்து, இப்பயிற்சியை மேலும் விரிவாக்கிச் சிறுமியர்க்கும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது இப்பள்ளி நிர்வாகம். சிறுமியர்க்குச் சில வரைமுறைகளுடன் கொடுக்கப்படும் ‘Tai chi’ என்ற ஒரு வகைப் பயிற்சியாகும் அது. ( A Chinese system of exercises consisting sets of very slow and controlled movements. )
மாணவர்களின் பயிற்சி ஆர்வத்தையும், ஆசானின் பயிற்சியையும் கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்!

புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ]

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கவிதைகள் (POEM)

Tags:

0

அன்புடன் மலிக்கா

மாதம் புனித மாதம்- புதிதாய்
பிறக்கும் ஒவ்வொரு வருடம்

அறம் நல்லறம் கொண்டுவரும்
நோன்பு என்னும் புனித விரதம்

அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம்
ஆண்டவனின் சன்னிதானம் அடைப்பெறும் மாதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட புனிதமான மாதம்

சங்கைமிகு லைலத்துல் கத்ர் [ஆயிரம் மாதங்களைவிட
சிறந்த இரவு] வந்து இறங்கும் மாதம்
தீங்குசெய்யும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம்

இறைவனிடம் கேட்டதும் கிடைக்கபடும் மாதம்
இறைச்செய்தி இறக்கப்பட்ட இன்பமான மாதம்
தக்வா என்னும் இறையச்சத்தின் பயிர்ச்சிக்கான மாதம்

சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம்
நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதம்

விடிய விடிய வணக்கங்கள் செய்யப்படும் மாதம்
விடிந்தபின் விரதங்கள் போற்றப்படும் மாதம்

திக்ருகளும் தஸ்பீஹ்களும் ஓதப்படும் மாதம்
தீமைகளை விட்டுவிட்டு தவிர்ந்திருக்கும் மாதம்

நன்மைகளை செய்து நல்லருள் பெறும் மாதம்
நன்மை ஒன்றுக்கு பத்து என பெருக்கித்தரும் மாதம்

ஜக்காத் என்னும் கொடைகள் கொடுக்கப்படும் மாதம்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரிவழங்கும் மாதம்

மலையளவு தவறுகளும்- மனமுருகி
கேட்கும்போது மன்னித்தருளும் மாதம்

இறையச்சத்தால் செய்யப்படும் நன்மைக்கேற்ப
முன்செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் மாதம்.

நோன்பு இது நோன்பு –இதை
நோற்போருக்கு கிடைக்கும் மான்பு

மாயவரம் மெது பகோடா

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , ,

0

புவனேஸ்வரி ராமநாதன்.

நம் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்து விட்டார்கள் என்றால் எங்கள் மாயவரம் பகுதியில் இந்த மெது பகோடாதான் செய்து தருவார்கள். குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் ஏதாவது நொறுக்குத் தீனி கேட்பார்கள். சரியாக 10 நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம். செய்வதும் மிகச் சுலபம். மாலை வேளையில் காபி, டீ, உடன் வைத்து சாப்பிடச் சுவையாக இருக்கும். எங்கள் ஊர் டீக்கடைகளில் இந்த மெது பகோடா ரொம்ப பிரபலம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 4
பச்சை மிளகாய் : 2
கடலை மாவு : 100 கிராம்
அரிசி மாவு : 2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : வறுக்கத் தேவையான அளவு


செய்முறை:

பெரியவெங்காயத்தை நீள வாக்கிலும், பச்சை மிளகாயை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

சூடான எண்ணையில், கலந்து வைத்த மாவை உதிரி, உதிரியாகப் போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இந்த பகோடாவை செய்ய வேண்டும். பகோடா மொறுமொறுவென்று வரும் வரை காத்திராமல்,

முக்கால் பதம் வேகும்போதே எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு பொன் முறுகலாகவும், மெதுவாகவும் இருக்கும். இந்த பகோடா பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை கஷ்டமில்லாமலும், ருசித்தும் சாப்பிடுவர்.

Posted by புவனேஸ்வரி ராமநாதன்

Labels: ,

நன்றி : http://maragadham.blogspot.com/2010/08/blog-post_09.html